ஆலய வரலாறு

சுவிஸ் மற்றும் லுட்சேர்ன்பக்தர்களின், அன்பர்களின் பேராதரவுடன் அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 24 .01 .2016 ஞாயிற்றுக்கிழமை தைப்பூச தினம் முதல் ராஜராஜேஸ்வரி அம்பாள் திருவுருவப்படம் வைத்து லுட்சேர்ன் Reuss நதிக்கரையோரம் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஆரம்பமானது. தொடர்ந்தும் பெரியதோர் புதிய இடம் தேடும் பணி நடைபெற்று பல இடங்களில் தேடி இறுதியாக ராஜராஜேஸ்வரி அம்மன் திருவருளால் 28 .07.2016 அன்று Emmenbrücke ல் சிறிய எம்மி நதிக்கரையோரம் புதிய இடம் பார்க்கப்பட்டு அந்த புதிய இடத்தில் 11.09.2016ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை சுபநேரத்தில் சங்குஸ்தாபனம்(அடிக்கல் நாட்டு விழா) நடைபெற்று ஆலய நிர்மாணப்பணிகள் தொடங்கியது.
அம்பாளுடைய திருவருளாலும் அம்பாளுடைய மிகப்பெரிய அற்புதங்களாலும், புதுமையினாலும் ஆலய கட்டுமான பணிகள் எவ்வித தடங்கலுமின்றி மிகவிரைவாக நிறைவு பெற்று கும்பாபிஷேக கிரியைகள்
31. 5 .2017 புதன்கிழமை முதல் ஆரம்பமாகி 04. 06 2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்பு 11 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 14 .6. 2017 அன்று இனிதே சங்காபிஷேகத்துடன் நிறைவேறி அம்பாள் அருள் மழை பொழிய அருளாட்சி புரிய ஆரம்பித்துவிட்டாள்.
ஆலயத்தின் 1 ம் அலங்கார உற்சவமானது 28.0 6 . 17 வியாழக்கிழமை கணபதி ஹோமம் வாஸ்து ஹோமத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து பத்துத் தினங்கள் சப்பறம் தேர் தீர்த்தம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்ற பெருமைக்குரிய புதுமை கூறிய அந்த கோயிலாக ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் திகழ்கிறது.
குறுகிய காலத்தில் பக்தர்கள் பலரின் வேண்டுதல்களை நிறைவேற்றி புதுமை மிக்க அம்பாளாக திகழ்கிறார் .

 

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

 

ஒவ்வொரு மனமும் விரும்புவது, மேன்மேலும் வளர்ச்சி என்பதைத் தான். பணம், சொத்து என்று, எதை நினைத்தாலும், இன்னமும் வேண்டும் என்றுதான் விரும்புகிறது. அப்படிப்பட்ட விருப்பங்களில் ஏமாற்றம் எதிர்ப்பட்டால் திகைத்து தடுமாறுகிறது. அந்தத் தடுமாற்றத்தாலும் பயத்தாலும்,தவறுகளைச் செய்கிறது; துன்பங்களில் சிக்குண்டு தவிக்கிறது. இத்தகைய நிலைகளில் சிக்காமல், பக்தர்களை முறைப்படுத்துபவள் ஸ்ரீராஜராஜேஸ்வரி. மகாமேருவின் உச்சியில் சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரியாக வீற்றிருப்பவள் இவள்தான். லலிதா என்றும் திரிபுரசுந்தரி என்றும் கொண்டாடப்படுவள் இவளே. இவளுடைய சிறப்பைக் கூறுகின்ற துதி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை! ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.

3. ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

4. விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

7. சித்து வேலைகள் கை கூடும்.

8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.

9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும் இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராஜராஜேஸ்வரி அம்மனை இந்த கலியுகத்திலும் வணங்கி வர பல நலன்கள் விளையும். தேவர்களின் துயரைத் துடைத்து ராஜ வாழ்வை மீட்டுத் தந்த அன்னை ராஜராஜேஸ்வரி, தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அனைத்து வளங்களையும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்லது) ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கும் பகவதி ஸ்ரீ சண்டிகா தேவிக்கும் மிகவும் ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள், எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன.
அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே. 1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ, பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள்.
இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள். 2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள் 3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள்.
வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். 4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள் 5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள்.
வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். 6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். 7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள்.
பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். 8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத் அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம் அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம் (இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் 
ராஜராஜேஸ்வரி தேவி அம்பிகையானவள் பார்வதி,காமாட்ஷி ,மூகாம்பிகை ,காளிகாம்பாள் போன்ற பல உருவங்களில் இருந்து நமக்கு அருள்பாவிக்கிறாள்.அவள் எடுத்த வடிவங்களில் ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா அவதாரமும் ஒன்று.அந்த வடிவத்திற்குரிய சுலோகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.1000 மந்திரங்கள் கொண்ட தொகுப்பே லலிதா சஹஸ்ரநாமம் .இந்த 1000 மந்திரங்களும் லலிதாம்பிகைக்கு பிரியமானவை. அம்பிகையின் புகழை சொல்லிக்கிட்டே போகலாம்.அம்பாளின் துதிகள் நிறைய உள்ளது.அந்த துதிகளில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் .உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர். நவராத்திரியின் நாயகியாய் ராஜராஜேஸ்வரி தேவி அருள்கிறாள். தினம் ஒரு அலங்காரம், தினம் ஒரு நைவேத்தியம் என ஒன்பது நாளும் திருவிழாக்கோலம் கொள்ளும் நவராத்திரி நாட்கள் அம்பிகையை உபாசிக்க உகந்த நாட்களாகும்.
துன்பங்களை துரத்துவதால் துர்க்கா என்று பெயர் பெற்ற தேவி அருளும் சில தலங்களை நவராத்திரியில் தரிசித்து பேறு பெறுவோம். மகேசனின் மீது மலர்க்கணை எய்தான் மன்மதன். சிவன் சினம் கொண்டார். அரனின் கோபக்கனல் மன்மதனை பொசுக்கி சாம்பலாக்கியது. குவிந்து கிடந்த அந்த சாம்பலைக் கண்டு குதூகலித்த குட்டி விநாயகன், அதை அழகிய சிலையாக்கினான். பார்த்தவரை பரவசப்படுத்தும் அழகோடு இருந்த சிலையை அன்னை பார்வதியிடம் கொண்டு சென்றான். சிலையின் அழகைக் கண்டு வியந்த அன்னை பார்வதி, இந்தச் சிலைக்கு உயிர் கொடுத்தால் விநாயகனுக்கு விளையாட்டுத் துணையாய் இருக்குமே என்று நினைத்தாள். பார்வதியின் மனதைப் படித்த பரமனின் உதடுகளில் புன்னகை பூத்தது. முக்காலமும் அறிந்த முக்கண்ணன் சிலையை தன் தாமரைக் கண்களால் நோக்கினார். அரனின் அமுதமயமான பார்வை பட்டு சிலை சிலிர்த்து உயிர் கொண்டது. தன் கோபத்தால் உண்டான சாம்பல் அல்லவா, ஆகவே உயிர் பெற்ற அந்த சிலைக்கு பண்டாசுரன் என்று பெயரிட்டார் ஈசன். பண்டாசுரன் விநாயகனின் விளையாட்டுத் தோழனானான். ஒரு சமயம் தேவர்கள் பலர் பனிமலைக்கு வந்து பரமனை பணிந்து வணங்கினார்கள்.
அப்போது அங்கிருந்த பண்டாசுரன் தேவர்களின் வலிமையையும் வளத்தையும் கண்டு வியந்தான். தனது வியப்பை தோழன் வேழமுகத்தானிடம் பகிர்ந்து கொண்டான். தன் சக்தியால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பரமனின் மனம் குளிர தவமியற்றினால் வேண்டும் வரம் யாவும் கிட்டும் என்று சக்தி பெறும் சூத்திரத்தை பண்டாசுரனுக்கு சொன்னான் விநாயகன். கடுந்தவமிருந்தான் பண்டாசுரன். பரமன் மகிழ்ந்து, ‘‘வேண்டும் வரம் கேள்’’ என்றார். ‘‘பிரபஞ்சம் என் வசமாக வேண்டும். தேவர்கள், அசுரர்கள், ஆயுதங்கள், அஸ்திரங்கள் ஆகிய அனைத்தையும் நான் உருவாக்க வேண்டும். எனக்கு அச்சமில்லாத, மரணமில்லாத வாழ்வு வேண்டும்’’ என்று கேட்டான். ‘‘இத்தகைய வரம் பெறும் தகுதி உனக்கு இல்லை’’ என்று சொல்லி மறைந்தார் மகேசன். பண்டாசுரன் மனம் தளரவில்லை. மீண்டும் தவமிருந்தான்.
தவத்தில் கடுமையைக் கூட்டினான். பரமன் பண்டாசுரனுக்கு மீண்டும் காட்சி தந்தார். இம்முறை மும்மூர்த்திகள் தன் வசமாவது, சாகாவரம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். பண்டாசுரன் திருப்தியடையவில்லை. அந்த இரண்டு வரங்களையும் தன் கைக்கு வரவழைக்க, தவத்தினை மேலும் உக்கிரமாக்கினான். இவனை இவன் போக்கிலேயே போய் சரிகட்ட வேண்டும் என்று நினைத்த சங்கரர், ‘‘தேவர்களாலோ, அசுரர்களாலோ, தாய் வயிற்றில் பிறந்தவர்களாலோ, பறவைகளாலோ, புழுக்களாலோ மற்றும் அஸ்திரங்களாலோ உனக்கு மரணம் நிகழாது’’ என்று வரம் தந்து மறைந்தார். தனது லட்சியத்தில் வென்ற ஆனந்தத்தில் அன்னை பார்வதி தேவியிடம் சென்று நடந்ததை எல்லாம் சொன்னான், பண்டாசுரன். அதைக் கேட்டு கலக்கமடைந்த உமை,தேவர்களோடு அவன் எப்போதும் பகை கொள்ளக் கூடாது என்றுஅறிவுரை கூறினாள். அதன்பின் பண்டாசுரன் பாதாள லோகத்திற்கு அரசனானான். ஆனால், பாதாள லோகத்து அசுரர்கள் அவனைத் தூண்டி விட்டார்கள்.
மூவுலகையும் ஆளப் பிறந்தவன் நீ என்று கர்வத்தீயை வளர்த்து விட்டார்கள். மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் போர் துவங்கினான் பண்டாசுரன். போரை உக்கிரமாக்கினான். தேவர்களை அடிமையாக்கி வதைத்தான். அவனுடைய பராக்கிரமங்களை கண்ட தாரகாசுரன் தனது நான்கு தங்கைகளை அவனுக்கு பரிசாகத் தாரை வார்த்துத் தந்தான். பரிசும் பாராட்டுகளும் பெற்ற மோகம் பண்டாசுரனை மேலும் உசுப்பேற்றியது. கொடுமைக்கு சற்றும் தயங்காத எட்டு அரக்கர்களை திசைகளுக்கு அதிபதியாக்கினான். பிரம்ம லோகத்தின் மீது படையெடுத்துச் சென்றான். நடக்கவிருப்பதை யூகித்த பிரம்ம தேவன் அவனை புகழ்ந்து போற்ற, அங்கிருந்து வைகுண்டம் நோக்கி விரைந்தான்.
விஷ்ணுவும் பிரம்மனைப் போன்றே சாதுர்யமாக நடந்து கொண்டார். அடுத்து கயிலாயம் சென்றான் அசுரன். நண்பனென்றும் பாராமல் விநாயகரையும் விரட்ட ஆரம்பித்தான். வெகுண்டெழுந்த வேழமுகன் பண்டாசுரனின் படையை சிதறடித்தார். அவனை கதையால் தாக்கினார். மகனுக்கு உதவ அன்னையும் உக்கிரமாய் போர் தொடுத்தாள். பண்டாசுரன் கணேசனைத் தாக்கினான். அதைக் கண்ட அன்னையோ ஆவேசம் கொண்டவளாய் பண்டாசுரனின் கதையை முடிக்க தயாரானாள். அப்போது பிரம்மா சங்கரன் கொடுத்த வரத்தை அன்னைக்கு ஞாபகப்படுத்தினார். ‘‘பிழைத்துப் போ. இனி இங்கே வந்தால் அழிந்து போவாய்’’ என்று கூறி பண்டாசுரனை விரட்டியடித்தாள், அன்னை. இந்நிலையில் பண்டாசுரனுக்கு அடிமையான தேவர்கள் விடுதலை வேண்டி காத்திருந்தனர். தேவேந்திரனின் தலைமையில் ஒன்றுகூடி குரு ஆங்கிரஸரின் பாதம் பணிந்து வழி கேட்டனர்.
ராஜராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி ஆங்கிரஸர் கூற, மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தந்திர முறைப்படி மகாயாகம் செய்தார்கள். தேவர்களின் யாகத்தின் பயனாய் கொழுந்து விட்டெறியும் யாகத்தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றினாள். பண்டாசுரனின் கணக்கை முடித்து தேவர்களின் துயர் துடைத்தாள் அன்னை. இந்த கலியுகத்திலும் அன்னையை வணங்கி வர பல நலன்கள் விளையும்.

In regards to essay writing, nearly everyone will undoubtedly say they can do it by themselves. But here we aren’t talking about just writing an essay for fundamental academic standards. For this, you need to understand that written and spoken English are very different from one another. A https://huelvaya.es/2021/03/22/predicciones-del-aprendizaje-a-distancia/ native English speaker will have https://www.careerexperts.co.uk/career-progression/did-you-select-the-right-career-path a https://www.forexsq.com/what-is-crypto-a-guide-for-new-investors/ completely different approach to the written word than an essay writer who has never learned to write in his mother tongue. That’s why if you would like to employ an essay helper, you should make sure that your candidate has been through some sort of language training.

A helper for essays is a quick and simple method of creating an outstanding essay. Many people will only consider hiring professional essay writers when they themselves are not able to write the college essay. Others are more concerned with hiring an essay helper because of their family http://www.carlosloritefotografos.com/is-there-a-distinction-among-dartmouth-computer-science-and-it/ obligations such as looking after an ailing relative or child. Whatever the reason, essay helpers can be a valuable resource for anyone in need of assistance with any kind of https://www.newsmada.com/2020/03/24/do-they-exist/ writing paper.

Online essay writers are a virtual solution to writing college-level essays. You can get assistance with your essay online from experienced writers by https://cryptovn.net/five-strategies-for-winning-a-essay-wristlet/ using various services. Online essay writers typically have access to an extensive database of well-written and researched essays to help you complete your essay. You can also seek guidance on how to write your essay and where you can find additional resources such as AP courses as well as research guides. Essay writers can also offer proofreading and editing for a small cost that will allow you to have your written assignment done swiftly and effectively.

Writing college-level essays requires patience. College requires essay assignments to be thought out meticulously and completely before being submitted to your instructor. Your chances https://www.derekprince.org/Articles/1000085138/Terrorists_Attack_London.aspx of getting into the college you want to attend are higher if you take your assignments seriously. Hiring an essay https://sejadigital.com.br/nossahistoria/gired/ helper is a good option to pay that extra bit towards a high school education.

error: Content is protected !!