ஸ்ரீ கருடனது பார்வை நம்மேல் விழுந்தால் கிரக தோஷங்கள் விலகுமாம்

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன.

பரம்பொருளான விஷ்ணு பகவான் தனது வாகனமான கருடாழ்வார் மீது அமர்ந்து உலகை சுற்றிப்பார்த்தார்.

அப்பொழுது கருடன் விஷ்ணுவை நோக்கி “சுவாமி மனிதர்களின் இறப்பின் பின் என்ன நடக்கும்? இவர்களது உயிர் எங்கு செல்லும், இறப்பின் பின்னர் நடப்பது என்ன?” என்ற கேள்விகளை கேட்டது.

இதற்கு விஷ்ணுபகவான் வழங்கிய பதில்களே கருட புராணம் ஆகும். இந்த கருட புராணத்தில் இறப்பின் பின்னர் உயிர்கள் எங்கு செல்கின்றது, என்ன செய்கின்றது, சுவர்க்கம், நரகம், போன்ற அனைத்து விடயங்களும் மற்றும் மறுபிறவி பற்றிய விடயங்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில், இறந்ததும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு. அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன என்பதும் பொதுவாக எல்லா மதங்களும் கூறும் கருத்து.

கருடனின் பார்வைகள்

சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் அவரது பார்வை நம்மேல் பட்டால் கிரக தோஷங்கள் விலகும் என்றும் கூறுகின்றனர்.

  • விசாலா- மந்தகாசமான பார்வை
  • கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை
  • தாரா-குறுக்குப் பார்வை
  • மதுரா-அன்பையும் அருளையும் பொழியும் பார்வை
  • போகவதி-தூக்க கலக்கமான பார்வை
  • அவந்தீ-பக்கமாக பார்ப்பது
  • விஜயா-கணவன் மனைவி இடையே நேசத்தை வளர்க்கக் கூடியது
  • அயோத்தியா-வெற்றியைத் தோற்றுவிப்பது.

கருடரின் ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.

மேலும் இதனால்தான் வைணவ ஆலயங்களில் கருடனை தரிசித்துக் கொண்டு பெருமாளை சேவிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்

error: Content is protected !!