அனைவருக்கும் ஶ்ரீஇராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய வீறியெழல் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார்  உறவினர் நண்பர்கள்
இணைய  வாசகர்கள்  ஆனந்தம் பொங்கிட
 அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது  தமிழ் புத்தாண்டுநல்  வாழ்த்துக்கள்

 

தமிழ் ஆண்டு வட்ட அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது.

கிரக நிலை:

அன்றைய நேரத்தில் தனுசு ராசி, துலாம் லக்கினமாக அமைகிறது.

நவாம்சமாக கடக ராசியும், கும்ப லக்கினமாகவும், புதன் ஹோரை, கேது மகா தசையும், சனி புத்தி என அமைந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது.

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 7.20 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர் தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.

“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை

பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமின்றி சாவார் இயம்பு”

 

error: Content is protected !!