ஒருவரது ஜாதகத்தில் சூரியதோஷம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகள் தீர என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.

சூரிய தோஷம் விலக எளிய பரிகாரங்கள்
  • ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
  • பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.
  • முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.
  • அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யுங்கள்.சூரியதோஷம் இருந்தால் அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.
  • சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.
  • தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள்.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
  • தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.