அன்னை ராஜராஜேஸ்வரி மெய்யடியார்களே..

மே18 தாயகத்தில் பேரவலத்தால் உயிர்நீத்த எம்மவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மசாந்திக்காக ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் விசேடபூசை இவ்வாண்டும் 18.05.2019 சனிக்கிழமை மாலை 19:00 மணிக்கு அன்னை ராஜராஜேஸ்வரி சன்னிதானத்தில் நடைபெறவுள்ளது. அன்றையதினம் அடியார்கள் அனைவரும் இவ்விசேட வழிபாட்டில் கலந்துகொண்டு உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டியும், தாயகத்தில் சமாதானமும் எம்மக்களின் வாழ்வில் சுபீட்சம் மலரவும் அன்னை ராஜராஜேஸ்வரி திருப்பாதாரவிந்தங்களைத்தொட்டு பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.